கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் நாளை தொடங்குகிறது. சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வரும் நாளையும், நாளை மருதினமும் நடைபெற உள்ள இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் 574 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஒவ்வொரு முறை நடைபெறும் மெகா ஏலத்தின் போது அதிகமான தொகை வீரர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 2022 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது 551 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 2015 ஆம் ஆண்டு 87 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ. 230.45 கோடி செலவிடப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஏலத்திலும் பல வீரர்களுக்கு அதிக மவுசு இருக்கும். அவர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள். அப்படி நாளை தொடங்கவுள்ள ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 10 ஸ்டார் வீரர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News